ரகுவரன் - ஒப்புமை இல்லா அற்புத நடிகர்.
ஒவ்வொரு பாத்திரத்திலும் புதிய பரிமாணம் தந்தவர். உப்புமா
படங்களில் கூட தன் தனி பாணி நடிப்பால் சுவை கூட்டிப் போன
மிகச் சிறந்த நடிகர்.
எப்டி எப்டி
ஓடப்பராயிருக்கும் உலகப்பர்
. உணரப்பா நீ !
- ம்ம்ம் .. இந்த மாதிரி கூட்டத்தில கோஷம் போடறத உன்
மன்றத்தோட வச்சிக்கோ! - என்று மனிதன் படத்திலாகட்டும்,
க்க்கோவ் ! என்று கூறி குழந்தையை தள்ளும் பூ விழி வாசலிலே
சீனில் ஆகட்டும்,
ஆட்டொக்காரனா ஆனதும் பழைய ஆட்டம் லாம் மறந்திருப்பேன்னு
நெனாச்சேன்.. என்று கூறி
இஹ்ஹா.. இஹ்ஹா
என்று ரஜினியை
பார்த்து சிரிக்கும் பாட்ஷா படமாகாட்டும்,
அகலாது துகலாது தீக்காய்வார் போல
-ன்னு அசத்தலாய் அர்ஜுனை
பார்த்து பேசும் இடத்திலும், எல்லோர்க்கும் கல்வி. ல னா ல புள்ளி
இல்லாம அச்சாகி எல்லாருக்கும் கலவி இன்னு வந்திருச்சி -ன்னு சொல்லும் இடத்திலும், உச்சகட்டமாய் என்ன சமாளிக்கவே முடியல இல்ல? என்னும் இடத்திலாகட்டும், சிவகாமி சீப்பு குடுறி தல சீவனும் - என்று
முதல்வன் படம் முழுக்க அலப்பரை செய்த அரங்கனார் பாத்திரம் ஆகட்டும்,
இன்னும் எத்தனையோ படங்களில், எவ்வளவோ பாத்திரங்களுக்கு தன்
அபரிதமான நடிப்பால், தனித் தன்மையால் உயிர் கொடுத்து
செல்லுலாய்டில் உலவ விட்டவர்.
அருணாச்சாலத் தோட அடுத்த மூவ் கூட தெரியும்.. போன்ற
மிகச் சாதாரண வாக்கியங்கள் கூட அடிக்குரலில் ரகுவரன் பேசும்
போது தொனி மாறி கட்டிப் போட்டுவிடும் நம்மை.
புரியாத புதிர்-இன் ஐ நோ .. ஐ நோ வை விடுங்கள். அரங்கனார்-ஐ அனுபவிப்பதற்காகவே பல முறை முதல்வன் பார்த்த லட்சக்
கணக்காணவர்களில் நானும் ஒருவன்.
என் எழுத்தை மாற்றி விட்டுப் போன அமரர் சுஜாதா சொன்னது போல,
இயக்குநர் கனவுகளோடு கோடம்பாக்கம் நோக்கி வரும் ஒவ்வொரு
மனிதனின் ஸ்கிரிப்டிலும் ரகுவரன்-ன் பெயர் எழுதப் பட்டிருக்கிறது.
மனிதர் மறைந்து போனார்.
எல்லோராலும் விரும்பப் பட்டவர், சாதனையாளர், மீடியா
விளக்குகளின் பெரிய வெளிச்சங்களில் பிரகாசமாய் வலம்
வந்தவர். ஆத்மா சாந்தி அடையட்டும் என்று சொல்லி விட்டு
விட விருப்பம் இல்லை எனக்கு.
இவ்வளவு சிறந்த நடிகன் இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமே
என்று கடவுளின் கணக்கிற்கு எதிராய் எண்ணவும் விருப்பம் இல்லை.
எப்போது அனுப்புவது, எப்போது கூப்பிட்டு கொள்வது என்பது
அவனுக்கு தெரியும்.
என்னுள் எழுந்த கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றை நோக்கித்தான்
- மரணம் சரி. அது இப்படியா வர வேண்டும்? இந்த வயதிலா ?
காதலித்து மனம் முடித்த ரோகிணியும், ஒவ்வொரு நாளும் வீடு
நோக்கி ஓட வைத்த மகன் ரிஷியும் இருந்தும் இப்படி ஆனாதையை
போலவா முடிய வேண்டும் அந்த தருணம்? சிவாஜியின் இறுதி
கட்ட படப் பிடிப்புக்கும், பீமா வின் மொத்த படப்பிடிப்புக்கும்
கேரவனில் படுத்துக் கொண்டே வந்தாராமே, உக்கார கூட
முடியலயாமே.. இப்படியா கழிய வேண்டும் ஒரு சாதனையாளாரின்
கடைசி தருணங்கள்?
அவர் மேல் கொண்ட பிடித்தத்தின் பால் என்னுள் ஆயிரம் கேள்விகள்.
சற்று முன் பெங்களூர் சாலைகளில் பொத் பொத்- தென்று மழையோடு
விழுந்து கையில் எடுத்ததும் கரைந்து போன ஆலங்கட்டிகளை போல
எல்லாம் கரைந்து போகின்றன. ஆனாலும் எல்லாக் கேள்விகளுக்குமாய்
விடை மட்டும் திடமாய் ஒரே ஒரு திக்கை நோக்கி நிற்கிறது.
போதை பழக்கம் ! . ரோஹினியை பிரித்து, வாழ்வின் பயனாய் பேசப்
பட்ட ரிஷியை பிரித்து, பற்றிக் கொண்டேன், விட மாட்டேன் என்று
சாய் பாபா வை தொழுத கைகளில் மதுக் கிண்ணங்களை பிடிக்க
வைத்தது எது?
போதை பழக்கம் !.
ரகு வரனின் தம்பி சுரேஷ் சொல்வது உண்மை, அவருக்கு தனது
பிரச்சினைகள் தெரிந்திருந்தன. ஆனால் விட முடிய வில்லை. நடிப்பில்
பர்ஃபெக்ட்-ஆய் இருந்தவரால், வாழ்க்கையில் பர்ஃபெக்ட்-ஆய் இருக்க
முடியவில்லை.
எவ்வளவு தெளிவு இருந்தும், திறமை இருந்தும் கூட, எப்போதோ
தொடங்கப் பட்ட போதை பழக்கம் விளையாடி விட்டு போய்விட்டது.
மனைவியை பிரித்து, மகனை பிரித்து, உடலை கெடுத்து, வாழ்வை
முடித்து விட்டு போய் விட்டது.
நல்ல நடிகன் தான், கெட்ட பழக்கம் தின்று விட்டது. நீண்ட ஆயுளுக்கு
காரணம் உணவோ, உடற்பயிற்சியோ மட்டுமே இல்லை. வாழ்வு முறையும்
கூட மிகப் பெரிய காரணம் - என்று ஃப்ரோசன் தாட்ஸ் இதழில் 103 வயது
மூதாட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது.
பீமா திரைப் படத்தின் இறுதியில் வரும் ராமகிருஷ்ணனின் வரிகள்
மிகச் சரியே
ஒருவன் ஒரு பாதையை தேர்ந்து எடுக்கும் போதே, அதன் முடிவும்
தீர்மானிக்கப் படுகிறது.
: எண்ணமும், எழுதும் - பரமன் பச்சைமுத்து. | மணக்குடியான்.காம்
:
Category - Thoughts Unlimited Thamizh | www.manakkudiyan.com .
Previous entries of Thoughts Unlimited column
<<- - -Back to Main Page

