rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
greengrass
Categories
message
Politics
Cricket
Movies
Zen Stories
Hobbies
Humor
Thoughts Unlimited
Music
Manakkudiyan.com
Kavithai
Poetry
Religion
MATHS
Writing
cinema
health
Sports
Seeker's Hut
draft
Life-Salad
Fantasy
Happening
Technical
tamil
Travel
My Top Posts
“Oh Accident – B...
Rama's Bridge Vs...
Sethu Samudhra ...
Part - 2: RAMA S...
Review - Sivaji ...
Unmatchable Kama...
Sivaji welcomes ...
Punch Dialogue i...
Favourites 8
meena sundar
Seeniraj Sivakumar
greengrass
shobha warrier
Saniya
Fredrick steven
shabdika Sharma
tamilini A
What is an RSS feed?
RSS Feed 
thoughtsunlimited.rediffiland.com/  
Wednesday 20 August, 2008
 22:34 | 10/Jul/2008 |  0 Comment(s)
  Add greengrass as Friend     Write to greengrass     Forward this link
மன்மோகன் சிங்கின் தசாவதாரம்!

From www.manakkudiyan.com :

 

மன்மோகன் சிங்கின் தசாவதாரம்!

 From Ananda Vikatan :

 ManmohanDasavathar

வன் ஜார்ஜ் புஷ்ஷின் சீடன் ரங்கராஜ நம்பிசிங். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகு அசைவதற்கும் பிரகாஷ் காரத்தின் கோபத்துக்கும்கூட ஒரு தொடர்பு இருக்கிறது. இதைத்தான் மேற்கத்திய சிந்தனை கேயாஸ் தியரி என்று சரியாகச் சொல்கிறது. சாமியையே நம்பாத இந்த இடதுசாரிகள் ஏன் இப்போது சாமி வந்தது மாதிரி ஆடுகிறார்கள் என்பதை விளக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்துக்குப் போக வேண்டும். ‘யோவ்! அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!’ என்று நீங்கள் கதறினால், குறைந்தபட்சம் ரஷ்யா வரை, வேண்டாம்… சீனா வரையாவது வாருங்கள். இதோ கதை சொல்லும் நானே கதையின் நாயகன் ஆனேன்.

காங்கிரசும் பி.ஜே.பியும் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்காத காலம் அது. கம்யூனிஸ்டுகளும் நிலப்பிரபுக்களும் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொண்ட ஏதோ ஒரு நூற்றாண்டு. ‘ஓம் நமோ அமெரிக்கா ஒழிக!’ என்ற பன்னிரண்டு எழுத்து மந்திரத்தைத்தான் அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்று 59ம் கம்யூனிஸ்ட் ஆணையிட்டான். ‘ரங்கராஜநம்பி சிங்’ அதை ஏற்க மறுத்தான் ‘அமெரிக்காவை மட்டும் பார்த்தால் ஆட்சி நிலைக்காது. ஆட்சியை மட்டும் பார்த்தால் அமெரிக்கா நிற்காது’ என்று பின்னணியில் பாடல் ஒலிக்க, அவரை அவரது கூட்டணிக் கட்சிகளோடு கட்டி தேர்தல் கடலில் தள்ளிவிட்டான்.

கோவிந்த் சிங்: ஸீ… இந்த அடாமிக் அக்ரிமென்ட் பத்தி பேச எங்க போனாலும் இந்த ஃப்ளெட்சர் மாதிரி கம்யூனிஸ்டு கள் ஃபாலோ பண்ணிட்டேஇருக் காங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிக்கணும்னா கையில் வெச்சி ருக்கிற அடாமிக் அக்ரிமென்ட் டைத் தூக்கி முலாயம்சிங்கோட பிராண்ட் நியூ பி.எம்.டபிள்யூ கார்ல போட்டுற வேண்டியது தான். அவரு கில்லாடி அதை அப்படியே பிடிச்சுக்கிட்டு அப்துல் கலாமோடு தப்பிச்சிருவாரு.

கிருஷ்ணவேணி பாட்டி சிங்: ”ஏன்டா… பிரம்மஹஸ்தி இந்த ஒப்பந்தத்தைப் பெருமாள் சிலைக்குள்ள போட்றதுக்கு பதிலாராமர் சிலைக்குள்ள போட்டுட்டா…பி.ஜே.பி. கலவரமாகும். மாயாவதியின் யானைக்கு மதம் பிடித்து அரசியல் கட்சிகளையெல்லாம் தூக்கியடிக்கும். காய்கறி வண்டியில கோவிந்த் என் பேத்தியைக் கட்டிப்பிடிச்சுட்டுப் போற மாதிரி நாம அணுசக்தி ஒப்பந் தத்தைக் கட்டி எடுத்துக்கிட்டு அமெரிக்கா போயி ஆராமுதனைப் பார்த்துடலாம்.

பல்ராம் நாயுடு சிங்: என்னைவிடப் பெரிய சயன்டிஸ்ட் வேணும்னா… அப்துல் கலாமைக் கூப்பிடலாமானு சும்மா ஒரு பேச்சுக்குதான் சொன்னேன். இந்த முலாயம் உண்மையிலேயே அப்துல் கலாமைக் கூட்டிட்டு வந்துட்டாரு. இந்த கம்யூனிஸ்டுங்க என்னைவிட இந்தசப்ஜெக்ட்ல மோசமா இருக்காங்க. ‘பை தி வே… முலாயம் நீரு தெலுகா?”

கலிஃபுல்லா கான் சிங்: சார் இந்த ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டாச்சுன்னா… நம்ம நாடு என்னைவிட உயரமா வளர்ந்துடும் சார்!

பூவராகன்சிங்: ”மக்களே…இதோ இந்த அனல்மின் நிலையத்தைப் பாருங்க. இதுக்கும் மரியாதை இல்லை. இதோ இது தலித்துங்க இறந்தவங்களை புதைக்கிற மயானம். இங்கேயும் கரன்ட் இல்லை. தமிழ்நாட்டிலும் கரன்ட் இல்லை. டெல்லியிலும் கரன்ட் இல்லை. புறவு, இந்த மணல்ல இருந்தா மின்சாரம் தயாரிக்க முடியும்? ஒப்பந்தத்தை போடுன்னு சொல்றேன் மக்களே..”  ManmohanBush

அவதார் சிங் (சோனியாவை பார்த்து): ”எம்.பி. வோட்டு உன் காதிலே தேனை வார்க்கும். தோழரின் பாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும். உடல் ஒப்பந்ததுக்கே போகட்டும். அணு பூமியை ஆளட்டும். ஓஹோ ஓஹோ சனம்… ஓஹோ ஒஹோ வோட்டு!”

ஜார்ஜ் புஷ்: ”யுரேனியத்துக்கு பதிலா என்.ஏ.சி.எல். வேணும்னா கொடுக்கிறோம். ஆனா,ஒப்பந்தத்துல கையெழுத்து போடக் கூடாதுன்னு பிரகாஷ் காரத் சொல்றார். பேசாம பிரகாஷ் காரத்துக்கும் ஒசாமாவுக்கும் தொடர்பு இருக்குறதா சி.ஐ.ஏவை வெச்சு ஒரு வதந்தி கிளப்பிருவோம். ஓ.கே. ஹூ இஸ் பிரகாஷ் காரத்?”

ஃப்ளெட்சர்சிங்: ”சிட்டம்பிரம்… போகணும்’னு நான் சொன்னப்ப மிஸ்டர் அமர்சிங் ஹாப்பியானது ஏன்னு இப்பதான் புரியுது. ஹூம்… என் பைனானஸ் மினிஸ்டருக்கே பாம் வைக்கிறார். புல் ஷிட்! வேர் இஸ் ஆட்டம் வயல்?”

ஷிங்கென் நரஹஸி சிங்: (ஜார்ஜ் புஷ்ஷிடம்) ”ஒரு அமெரிக்கனா உண்மையைச் சொல்லு…’ அணுசக்தியில இருந்து மின்சாரம் எடுக்கணும். இந்தியா நல்லா இருக்கணும்’னு இந்தியர்களை விட அதிகமா நீ கவலைப்படுறியே? நிஜமான காரணம் என்ன?”

: For Manakkudiyan.com, Posted by - Paraman Pachaimuthu

: Source - Ananda Vikatan.

: Category - Humor   | www.manakkudiyan.com   

Previous entries of Humor   

                   

<<- - -Back to Main Page 

Category: Humor | Permalink